Nature Photography


 "திருச்சி"

திருச்சிக்கென சில சிறப்பியல்புகள் உண்டு, பல பெருமைகளும் உண்டு,
பஞ்சபூத ஸ்தலங்களில் நீருக்கான கோயிலாக ஜம்புகேஸ்வரர் கோயில்
108 திவ்யதேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில்
அந்த ரெங்கநாதர் கோயிலே திருச்சிக்கு வர காரணமான உச்சி பிள்ளையார் கோயில்
இறைவனே தாயாக வந்து பிரசவம் பார்த்த தாயுமானவர் கோயில்
அனைத்து சமயத்தவரும் வரும் சமயபுரம் மாரியம்மன் கோயில்
திருமணதடைநீங்கும் குமாரவயலுார் முருகன் கோயில்
சிவன் விஷ்ணு பிரம்மா என மூவரும் குடிகொண்டுள்ள உத்தமர் கோயில்
பிரம்மனுக்கென்றே பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோயில் என கோயில் நகரமாக மட்டுமின்றி
காமராஜராலும் ஆர், வெங்கட்ராமனாலும் கொண்டுவரப்பட்ட இந்தியாவின் நவரத்தன நிறுவனமான பாரத மிகு மின் நிறுவனம் / பாரத்தின் பாதுகாப்பு கருவியில் தயாரிக்கும் படைக்கல தொழிற்சாலை./ துப்பாக்கி தொழிற்சாலை/ இரயில் இஞ்சின்களை உருவாக்கவும் பழுதுபார்க்கவும் பிரச்சித்தி பெற்ற இரயில்வே தொழிற்சாலை, மேலும் உலகிற்கே நீரை தேக்கி விவசாயம் செய்ய கற்றுக்கொடுத்த கரிகால சோழன் கட்டிய கல்லணை என்று பல உள்ளன, அதே போன்று அதிவிரைவாக மின்மயமாக்கப்பட்ட இரயில் வழி
மிகவும் தரமாக போடப்பட்ட நாற்கர சாலை மற்றும் நீர்வழிச்சாலைக்கு பயன்படபோகும் அகண்ட காவிரி நீர் பாதை போன்ற மூன்று இடைவெளி இன்றி
உடனுக்குடன் ஒரு சேர இருக்கும் இந்த மூவழிச் சாலை சிறப்பு பெற்றது,
அதை ஒரு காலைப்பொழுதில் நடைபயணத்தில் கண்டு களிப்பது பேரின்பமானது,

Comments

Popular posts from this blog

Brahmin Photography

Maternity Photography

Indian Dance BharathaNatyam