Temple Photo Shoot


 சமீபத்திய ஒளிப்பட பதிவு ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் நடந்தது,

படப்பதிவு இடைவேளையில் இந்த வெள்ளைகோபுரம் நெஞ்சில் அகலாத பல சரித்திர உண்மைகளை நினைவூட்டியது,
நம்மக்கள் ஆன்மீகத்தோடு நின்றுவிடாமல் அதற்கு துணையாயும் வழிகாட்டியாகவும் இருந்து விளங்குகின்ற நம் பெருமைமிக்க கோயில்களை காப்பது என்பது முக்கியமானது,
அதற்கு அவரவர் சக்திக்கேற்ப தன் உடல், பொருள், ஆவி, அறிவு திறமை போன்ற எண்ணற்ற தியாகங்களையும் செய்யவேண்டிவரும்,அப்பொழுதான் அந்நிய தீயசக்திகளிடமிருந்து நம் சனாதன தர்மத்தை காக்க இயலும்,
கொள்ளையடிக்கவும், பெருங்கொடுமைகள் செய்தவர்களுமான அந்நியர்கள் எந்த எல்லைக்கும் சென்று நம்மை அழிக்க செயல்பட்டனர், படுகின்றனர், செயல்படுவர், அச்சமயம் நாம் விழிப்போடு அதனை எதிர்கொள்தல் அவசியமாகிறது,
என்னால் என்ன செய்யஇயலும் என வருந்தி ஒதுங்காமல் முடிந்தவரை நம் சக்தியை ஒன்றுதிரட்டி செயல்படுதல் அவசியம்
இந்த வெள்ளையம்மாள் தியாகமும் இந்த வெள்ளைகோபுரம் அதையே ஒவ்வொரு முறையும் தம்மக்களுக்கு உணர்த்துகிறது,
தாயார் தரிசனம் எவ்வளவு முக்கியமோ அதற்கு சிறிதும் குறைவற்ற தரிசனம் வெள்ளை கோபுரத்திற்கும் உண்டு

Comments

Popular posts from this blog

Brahmin Photography

Maternity Photography

Indian Dance BharathaNatyam